“To be in your children’s memories tomorrow, you have to be in their lives today.”
A seminar on ‘Positive parenting’ by Dr. S. Sivathas (Consultant Psychiatrist, Teaching Hospital, Jaffna) to parents, was held on 06 July 2023, arranged by OGA of Chundikuli Girls’ College.
Key messages shared at the seminar:
1. உங்கள் பிள்ளைகளுடன் நிபந்தனையற்ற அன்பு செலுத்துங்கள். உங்களின் அன்பை பிள்ளைகள் உணருமாறு வெளிப்படுத்துங்கள்.
2. உங்கள் பிள்ளைகளுடன் தரமான நேரத்தைச் செலவிட்டு, அவர்களுடன் சரியான இணைப்பைப் பேணுங்கள்.
3. உங்கள் பிள்ளைகள் உங்களுடன் அச்சமின்றி எதைப்பற்றியும் பகிரலாம், கதைக்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்.
4. பெற்றோர்களுக்கிடையிலான சச்சரவுகளைத் தவிர்த்து, வீட்டில் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான, மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்துங்கள்.
5. பிள்ளைகளின் தனித்துவத்தை அடையாளம் கண்டு அதற்கேற்ப ஊக்குவியுங்கள்.
6. பிள்ளைகள் விளையாட்டு, சங்கீதம், நடனம் போன்ற இணைச்செயற்பாடுகளில் ஈடுபட வழிபடுத்துங்கள்.
7. பிள்ளைகள் சலிப்படையாது என்றும் உற்சாகமாய் இருப்பதற்கு வழிபடுத்துங்கள்.
8. பிள்ளைகளுடன் உண்மையாய் இருத்தல்.
9. பிள்ளைகளுக்கு சிறந்த பெற்றோராய், முன்னுதாரணமாய் வாழ்தல்